Wednesday, November 9, 2016

ஔதும்பரன்




அன்புள்ள ஜெயமோகன், நலம். 
 நலமறிய ஆவல். 'கிராதம்' -19'  இப்போது படித்து கொண்டிருக்கிறேன்.

பன்றித்தலைகொண்ட சண்டாமிருகன்,  சிங்கத்தலைகொண்ட சார்த்தூலன், கழுதைத்தலை கொண்டிருந்த மூன்றாமவன் “என் பெயர் ஔதும்பரன். பொருள் சுமந்து வாழ்ந்து அமைந்தவருக்கு இறுதிசொல்லச் செல்பவன்… வருக, பாண்டவரே” என்றான். மானின் தலைகொண்டிருந்த நான்காமவன் “என் பெயர் சம்பரன். அறிவிலமைந்தவரின் இறுதித்துணை நான். தங்களை வாழ்த்துகிறேன்” என்றான்.

சாம வேத சந்தியாவந்தனத்தில் கடைசியில் தெற்கு நோக்கி யம தர்மனை நினைத்து இந்த மந்திரம் சொல்வோம்  . இப்போதுதான் புரிகிறது என்னவென்று. மிக்க நன்றி

Yamaya dharma rajaya , mrutyuve cha anthakaya cha
Vaivaswathaya kalaya sarva bhootha kshayaya cha
Oudhumbharaya dhagnaya neelaya parameshtine
Vrukodharaya chithraya chithra gupthaya vai nama
Chithra gupthaya vai nama om nama ithi

அன்புடன்
ரா. ஹரிஹர வெங்கடேசன்