ஜெ
அர்ஜுனனை
நெருங்கிச்செல்லும் அந்த முதல்பெண்ணைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அவள் எப்படிப்பட்டவள்.
அவள் ஒரு துடிப்பான பெண். ஆனால் முந்திச்செல்வது அவளுடைய சுபாவம் இல்லை. அவள் அர்ஜுனன்
என்பதனால்தான் அப்படி முந்திச்செல்கிறாள். அதனால்தான் அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
அது காம்பு இற்றுப்போய் உதிர்வதுபோலத்தான். யாரோ பிடித்துத்தள்ளியதுபோலத்தான் போகிறாள்
அவளுடைய அந்த
நிலை ஏன்? அவளுக்குத்தெரியும் எட்டாதவன ர்ஜுனன் என்று. ஆகவே அவள் தன்னை தெய்வமாக ஆக்கிக்கொண்டு
அவனை நெருங்கிச் செல்கிறாள். அல்லது உயிரை விட்டு அவனை நெருங்கிச் செல்வாள். அவளுக்கு
இன்னொரு ஆண் வாழ்க்கையிலே இருக்கமுடியாது
சித்ரா