இனிய ஜெயம்,
நள்ளிரவில் இன்றைய அத்தியாத்தை
வாசித்து,அது கிளர்த்திய உணர்வில் , தவித்துக் கொண்டிருக்கிறேன் இந்த உடல்
கிட்டங்கி உள்ளே பதுக்கி வைத்த அத்தனை கந்தக நினைவுகளும் அழல் மூண்டு
உயர்ந்துகொண்டு இருக்கிறது.
என் காதல் தோழி
எனக்களித்த முதல் அரவணைப்பு. அவள் என்னைப் புறம்புல்குகையில் பைதலின் சிறு
விரல் தீண்டல் போல, எனைத் தீண்டி அழைத்த அவளது இடமுலைச் சுட்டின்
ஸ்பரிசத்தை மீண்டும் உள்ளே துல்லியமாக எழவைத்து பித்துக் கூட்டியது
உமையவள் செய்கை..
//அவர்கள் அருகணைந்தபோது அன்னை அவன் தோளை அணைத்து தன் முலையொன்றால் அவனை எய்து “எனக்கு மட்டும் ஏன் அது பாரிஜாதம்?” என்றாள்.//
முலையொன்றால் அவனை எய்து...
பாவி மகளே உனக்குத்தானடி பாரிஜாதம்.
.புராண
அழகியலை நவீன இலக்கியத்துக்குள் இயற்றுவதில் எய்தப்படும் ஆகச்சிறந்த
சாத்தியங்களை எந்த அலகிலும் தவற விடாமல் அள்ளித் தருகிறது வெண் முரசு.