Friday, September 16, 2016

லீலை



தருமருடன் நானும் தள்ளாடி திசை அறியாது மயங்கி, கலங்கி, சடலங்களாயிருந்த தம்பிகளைக்கண்டு கண்ணிர் உகுத்தவாறிருந்தேன்

ஆனால் மெய்மையை அறிந்தேன் என்று சொல்லமுடியாது. மீன் நீரிலென அதில் நான் இருப்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். அது நானாகிவிட்டதா என்று அறியேன்” என்பதை தருமன் மட்டுமே உணர்ந்து சொல்ல முடியும். இத்தனை நடந்தபின் தருமன் இப்படித்தான் சொல்லவும் முடியும்

பீமனின் சடலதின் முன் அமர்ந்து அவன் தலையை வருடியும், பார்த்தனின் மேல் அமர்ந்த ஈயை விரட்டி, காலின் மணல் பொருக்கைத்தட்டியும், நகுல சகாதேவர்களின் கன்னத்தை தடவியும் தருமன் இருக்கயில் கண்கள் நிறைந்தது. தருமனின் நெஞ்சு கொதிதுருகிக்கொண்டிருக்கிறது பாசத்திலும் இழப்பிலும்.

மீண்டு வரவில்லையெனில் சகதேவனுக்கு மணிமுடியும் மந்தனுக்கு மைந்தனாக நீர்க்கடன் செய்யும் கடமையும் அளிக்கிறார் தருமர். மந்தனே இது நாள் வரை தருமரை அதிகம் கடிந்து கொண்டதும் எதிர்த்ததும். அவனே தனக்கு முதன்மையானவன் என்று இன்று அவன் இறப்பில் தருமர் கண்டு கொண்டார?

லோகமாதேவி