Wednesday, September 7, 2016

கிருஷ்ணனைப்பற்றி




மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். சில கேள்விகள்

1) சுஷுப்தி நிலையில் "உணர்வுகள்" மட்டுமே உள்ளன. இந்த தத்துவங்கள் சுஷுப்தி நிலையில் அறிந்தால் தான் முழு அறிதல் போலும். சாந்தீபனி முனிவர் தன் மகன் மீண்டு வரும் போது (பாச உணர்வு) ஏற்பட்ட அறிதல், யாக்ஞவல்கியர் தங்கள் மனைவிகள் பிரியும் போது என்று உணர்வு போராட்டங்களில் தான், அவர்களுடைய அறிதல் மாறுகிறது.

2) கிருஷ்ணன் ஆபத்தான பல வனங்களுக்கு சென்று காரியங்களை நிறைவேற்றுகிறான் (உ.ம்: ஜாம்பவான் காடு). அப்படி இருக்கும் போது
காண்டவ வானத்திலும் இவர் நுழைந்து ஏதாவது செய்து அவர்களை வெளியேற்றி இருக்கலாமே. ஒட்டு மொத்தமாக எரிக்காமல் இருந்திருக்கலாமே ?

3) நீங்கள் ஒரு முனைவரின் ஆய்வுக்கு, தகவல் சொன்னீர்கள். அவர் விவாத தளத்தில் மற்றவர் தெரிவித்த கருத்துக்களை தன் கண்டுபிடிப்பாக ஆய்வேட்டை சமர்ப்பித்து விட போகிறார்.


நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.

அன்புள்ள ராஜாராம்

உணர்வுகளிலிருந்து விடுபட்ட எண்ணம் என்பதில்லை. புனைவுகளில் வெளிப்படும் எண்ணங்கள்  ‘கருத்துக்கள்’ அல்ல. அவை உணர்வுநிலைகளே

வெண்முரசின் மீதான வினாக்களுக்கும் அதுவே பதில் சொல்லும்

முனைவர்கள் வாசிப்பதே இல்லை. வாசிப்பார்களா என்று பார்க்கலாம் என அக்குறிப்பை அனுப்பினேன். அந்தப்பெண் அத்தளத்திற்குச் சென்று பார்க்க்கூட இல்லை. அசட்டுத்தனாமக நாலைந்து கேள்விகளை அனுப்பினார். இனிமேல் தொடர்புகொள்ளக்கூடாது என எச்சரித்து வெட்டிவிட்டேன்

இது எப்போதும் நிகழ்வது. கல்வித்துறையில் அடிப்படை வாசிப்போ குறைந்தபட்ச அறிவோ கொண்டவர்கள் மிகமிக அரிது

இருந்தாலும் ஒருமுறை முயற்சித்துப்பார்ப்பேன். எப்போதுமே ஏமாற்றம்தான்

ஜெ