ஜெ
யுவனாஸ்வனின்
கதை கண்ணீரை வரவழைத்தது. தன்னுள் ஊறிய அன்னையை ஒருவன் எழுப்பிக்கொண்டு ஆலமரமாகி அமுதூட்டுபவனாக
ஆகிறான். ஒற்றைவரிக்கதை. அதற்குள் எத்தனை நுட்பங்கள். யுவனாஸ்வன் பெண்மைகொள்வதைப்பற்றிய
வர்ணனையை வாசிக்க வாசிக்க மனம் விம்மிப்பெருத்துக்கொண்டே சென்றது.
அவன் உடல் மாறுவதைப்பற்றிய
வர்ணனை. மனம் கொள்ளும் கனவுகள். கருவுறுதலின் மாற்றங்கள். அவன் அப்படியே அன்னை ஆகிறான்.
அவனுக்கு வரும் கனவுகளும் மனத்தளர்ச்சியும் எல்லாமே அழகு.
அவன் தன் மகனுக்குப்பால்கொடுக்கும்
காட்சி சிலிர்க்கவைத்தது. ஆணுக்குள்ளும் அம்மா இருக்கிறாள். அந்த அம்மா வெளிப்படும் நுட்பமான தருணங்களை வாசிக்க
வாசிக்கத்தீரவே இல்லை. அவன் அந்தக்குழந்தையைப்பெற்று அம்மாவாக முலையை கொடுக்கும்போது
நிறைவு அடைந்திருப்பான் என நினைத்துக்கொண்டேன். மகாபாரதம் எவ்வளவுபெரிய பொக்கிஷம்.
எத்தனைகதைகள் அதில்!
மகாதேவன்