Thursday, September 22, 2016

உண்டாட்டு



நான் பணிபுரியும்  கல்லூரியில் தமிழ்த்துறை நடத்தும் கருத்தரங்குகளிலும் சில சமயம் என்னையும் உரை ஆற்ற அழைப்பார்கள். எனக்கு தெரிந்த, தமிழ் இலக்கியத்துடன் தொடர்புள்ள தாவரவியல்  குறித்தே இதுநாள் வரையிலும் பேசி இருக்கிறேன் (நான் தாவரவியல் துறையில் பணிபுரிவதால்)

  வரும் ஜனவரியில் அவர்கள் நடத்தவிருக்கும் பன்னாட்டு கருத்தரங்கிற்கு தலைப்பு ”தமிழ் இலக்கியங்களில் உணவும் விருந்தோம்பலும்”.  

உங்களின் வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44  பகுதி 10 : சொற்களம் – 2 ல் துருபதன் பாஞ்சாலத்தில் ஐங்குலத்தவர்களுடன் இளைய யாதவருக்கு அளிக்கும் உண்டாட்டு குறித்து  நான் இந்த கருத்தரங்கில் பேச உங்களின் அனுமதியை கோருகிறேன். பல உண்டாட்டுகளை குறித்து வெண்முரசில் நீங்கள் சொல்லி இருப்பினும் இந்த குறிப்பிட்ட பகுதியில் அறுசுவை உணவுகள் குறித்தும், போஜனமந்திரம், சாந்தி மந்திரம், உணவு உண்ணும் முறை, உண்ணும் போது செய்ய வேண்டியவை செய்யவே கூடாதவைகள், ஒடுக்கு நெறிகள்,செலுத்து நெறிகள்  என பலவற்றை சொல்லியிருக்கிறீர்கள்

 நீங்களே சொன்னது போல சங்கின் ஓசையில் தொடங்கும் மங்கல பேரிசை போல இருக்கும் அந்த உண்டாட்டு.

இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறளின் விருந்தோம்பலும், ,மொர மொர வென புளித்த மோரும்,  காந்தல் மென்விரல்கள் பிசையும்முளி தயிரும்,  விரல் போல நிமிர்ந்த அரிசியும்,சிறுபாணாற்றுப்படையின் நண்டுக் கறியுமே திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருகிறது.
 வெண்முரசயும் , வெண்முரசின் உண்டாட்டையும், அவர்களுக்கு அறிமுகப்படுத்த உங்கள் அனுமதி வேண்டியே இந்த கடிதம் எழுதுகிறேன்.. அனுமதிப்பீர்கள் எனில் இது குறித்து மகிழ்வுடன் பேசுவேன் 

அன்புடன்
லோகமாதேவி