Friday, September 16, 2016

யட்சனும் குறளும்



அருட்செல்வப்பேரரசன் மொழிபெயர்த்ததில் யட்ச பிரஸ்னம் வாசித்தேன். தருமரின் பதில்கள் திருக்குறளில் அப்படியே வருவதைப் பார்த்ததும் வியப்படைந்தேன். வெண்முரசில் அவை திருக்குறள் வரிகளாகவே வருகின்றன.

//தேவர்கள், விருந்தினர், பணியாட்கள், பித்ரிக்கள் மற்றும் சுயம் ஆகிய ஐந்திற்கும் எதையும் காணிக்கையாக அளிக்கவில்லையென்றால், ஒரு மனிதன் சுவாசமுள்ளவனாக இருப்பினும் உயிருள்ளவன் ஆகமாட்டான்//

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்(கு)
ஐம்புலத்தா(று) ஓம்பல் தலை. (குறள்: 43)

வெண்முரசு: “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என ஐந்தோம்பாதான் பிறக்கவேயில்லை” என்றார் பாண்டு.

//பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத்தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மை}//

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (குறள்: 30)

வெண்முரசு: நான் ஷத்ரியனல்ல, அந்தணன். அந்தணனுக்குப் பிறக்கவில்லை, அனலோம்பவில்லை. அந்தண்மையால் அவ்வாறு ஆனேன்.

//பெரும் ஆசிரியர்கள், மாணவர்கள், உண்மையில் சாத்திரங்களைப் படிக்கும் அனைவரும், தீய பழக்கங்களுக்கு அடிமையானால், அவர்கள் கல்லாத மூடர்களாகக் கருதப்பட வேண்டும். அறக்கடமைகளைச் செய்பவனே கற்றவன்//

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (குறள்: 134)

திருமூலநாதன்