Tuesday, September 13, 2016

அறிவெனும் பதற்றம்









சாங்கியம் பருப்பொருளின் நுண்மையை தேடித்தவிக்கும் பெரும்பதற்றமன்றி வேறில்லை.


வைசேடிகர் பொருளை அறியும் பெருந்திகைப்பை அளைபவர்.


என்ற இரண்டு வரிகளாக இரு பெரிய மதங்களையும் யுதிஷ்டிரர்  புரிந்துகொள்கிறார். மூன்றாவதாக அருகரின் சமணம் வந்து நிற்கிறது. அதை அவர் எப்படிப்புரிந்துகொள்வார்? 

அனைத்திலும் ஆன்மாவைக்காணும் பதற்றம் மட்டும்தானா அது?

 அறியப்படுபவை எல்லாமே அறிவையே அளிக்கின்ரன. அறிவு ஒரு பெரிய பேய் போல இவர்களை எல்லாம் அலைக்கழிக்கிறது



சண்முகம்