அடுமனை மெய்மையின் களம். ஆனால் அவர் அங்கே ஒற்றைச்சுவைக்கு சமைக்கிறார்
“கற்பரசிகள் கட்டுண்டிருப்பவற்றிலிருந்து பரத்தையர் எளிதில் விடுபடுகிறார்கள்”
என்னும் இரு வரிகள் வழியாக நேரடியாகவே தத்துவத்திலிருந்து சமையலறை நோக்கிச் சென்றுவிடுகிறது வென்முரசு.
முக்கியமான பரிணாமம் இது. லௌபாயனரின் கதையை வாசிக்கையில் தத்துவம் எங்கிருந்து எங்கே வந்திருக்கிறது என்று புரிகிறது
சரவணன்