Monday, September 12, 2016

ஓசை






ஜெ

இத்தனை நாள் வரை நாம் பார்த்த யுதிஷ்டிரர் பேசிக்கொண்டே இருந்தவர். தனக்குள்ளும் தனக்கு வெளியேயும். இப்போது பேச்சு அடங்குகிறது. பேச்சு அடங்கிய பின்னரே அவருக்குள் வார்த்தைகள் திறக்கத்தொடங்குகின்றன. அதிலும் அவரது பேச்சு அடங்கும் விதம் அர்புதமாகச் சொல்லப்பட்டுள்ளது. சமையலறையில் பெரிய கூச்சல் இருக்கிறது. ஆனால் அதனுடன் அவர் இணையாதிருக்கும்போதுதான் அந்தக்கூச்சல். இயந்திரத்தில் ஒரு ஆணி நீட்டிக்கொண்டிருர்ப்பது போல. ஆணியை இயந்திரம் தேய்த்து மழமழப்பாக்கியதும் அதன்பிறகு சத்தமே இல்லை. அமைதி. அந்த அமைதியில் அவர் மொழியை மீண்டும் கண்டுபிடிக்கிறார். வெளியே கேட்கும் ஓசை உள்ளே உள்ள மொழியை இல்லாமலாக்கிவிடுகிறது என்று சத்குரு சொல்வார். அதைத்தான் இங்கே பார்க்கிறேன்

செல்லப்பா