ஊட்டியில் நடந்த ஓரிரு கவியரங்குகளை நித்யாவின் பொருட்டு குருகுலத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தபடி வினயா தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கவியரங்கின் தொடக்கத்தில் ஐந்து நிமிடச் சிற்றுரையை இவ்வாறு முடித்தார். “இலைநுனிகளைத் தொடும்படி பெருவெள்ளமெழுகையில் உங்கள் தனிக்கிணறுகளுக்கு என்ன பொருள்? அது கீதை. நண்பர்களே பெருவெள்ளம் மண்ணுக்கடியிலும் பெருக்கெடுக்கிறது.” அந்த அரங்கில் அன்று பேசப்பட்ட எக்கவிதையையும் விட மேலான ஒருவரியாக அது நின்றது. அரங்கு முடியும் வரை தமிழ்க் கவிஞர்களும் மலையாளக்கவிஞர்களும் பல்வேறு தருணங்களில் அவ்வரிகளுக்குச் சென்று சேர்ந்து கொண்டே இருந்தார்கள்.
என்னால் இதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.. கண்ணன் இன்று
வந்து புது வேதத்தில் நின்று துடங்கும் புள்ளி குறைந்தது ஈரட்டி
சந்திப்பிலேயே சில இடங்களில், உரையாடல்களில் சுட்டி காட்ட பட்டது. பின்
சென்னை குழுமத்தில் பேசியபோதும் மேலெழும்பியது.
முன்னது வெய்யோன் முடியும் தருவாய் அடுத்தது பன்னிரு படைக்களத்தின் கடைசி சில நாட்கள் மட்டுமே இருந்தன.
முன்னது வெய்யோன் முடியும் தருவாய் அடுத்தது பன்னிரு படைக்களத்தின் கடைசி சில நாட்கள் மட்டுமே இருந்தன.
கிருஷ்ணன் சாந்திபணியின் பீடத்தில் அமர்ந்து பேசுவது குறைந்தது மே 20ல் ஒரு சான்றாகவே தளத்தில் உள்ளது.
உண்மையில் நீங்கள் கொஞ்சம் நிறையவே எங்களை சகித்து தான் இந்த உலகில் எங்களுடன் சஞ்சசரிக்கிறீர்கள்.
இன்று தாங்கள் எங்கு எந்த கதையின் எந்த புள்ளியில்... உலகில்... உள்ளீர்களோ!
~~~~~~
நான் இதுவரை ஊட்டி குருகுலம் வந்ததில்லை.. அந்த அத்தியாயத்தை
தேவையில்லாமல் இந்த பதிவுடன் தொடர்ப்பு படுத்திக்கிறேனோ என்னவோ.. எனக்கு
அந்த சாந்தீபணி அத்தியாயத்தில் பீடத்தில் அமர்ந்தவரும் கையில் சமையல்
கரண்டியுடன் வந்து நின்றவரும் ஒரே நபரே என்று தோன்றியது.
~~~~~~~
நான் தமிழ் எழுத பழகியவன் அல்ல.. ஒரு அளவில் என் சுய தேவைக்காக மட்டுமே 2008ல்படிக்க ஆரம்பித்த்தேன் என்று எண்ணுகின்றேன் (அப்போது தான் வேலைக்காக வீடடை விட்டு வந்தேன்). இப்போது உங்களுக்கு அடிக்கடி எழுதுவதும் இல்லை.. சோம்பேறிதனமா இல்லை என் வேலையா என்று சொல்ல தெரியவில்லை.. நான் இரு முறை சென்னை குடுகையில் பேசி பின் அதை எழுதினேன். படித்து பார்க்க குபீர் சிரிப்பு தான் வருகிறது..
ஒரு அளவில் தளத்தையும், வேறு புத்தகங்களையும் படிக்க படிக்க
மேலும் நிறைக்கிறேன். ஒரு சந்தேகம் இருந்தது சரியாக படிக்கிறோமா என்று அது
நம் குழுமம் கூடுகைகள் மூலம் தெளிவாக காணக்கிடைத்தது. போகவேண்டிய
தூரங்களும். :)
நன்றி
வெ. ராகவ்
வெ. ராகவ்
அன்புள்ள ராகவ்
நான் சில குருகுலங்களுடன் தொடர்பில் இருந்தேன். கடைசியாக நித்யா குருகுலம். இந்தவேதப்பள்ளிகளை அந்த அனுபப்புலத்தில் நின்றே எழுதினேன். தெரிந்தவர்கள் சில கதாபாத்திரங்களைக்கூட அடையாளம் கண்டுகொண்டிருக்கலாம்
ஜெ