ஜெமோ
சமையலறையில் தருமன் ஒன்றும் தெரியாமல் ஒன்றும் செய்யமுடியாமல் அவர்களுடன் இணையாமல் தயங்கி நிற்கும் காட்சி அவர் குணச்சித்திரத்தைக் காட்டுகிறது. உண்மையிலேயே அவருக்கு இந்த உலகத்திலே ஒன்றும் தெரியவில்லை. இதுவரை ஒதுங்கித்தான் நின்றிருக்கிறார். கடைசியில் தன்னை உலகத்துக்குக் கொடுக்கிறார். அது நதிபோல அவரை இழுத்துக்கொண்டுசெல்கிறது
அந்த சமையலறையில் விருந்தினரை உபசரிப்பது முதல் எச்சில் இலையை எடுப்பது வரை எல்லா வேலைகளையும் அவர் செய்யும் காட்சி அழகானது. அவர் வேலைசெய்துகொண்டே இருக்கிறார். எறும்புகள் பேசிக்கொள்வதுபோல அவர்கள் பேசிக்கொள்வதை காணமுடிந்தது. எல்லா வேலைகலையும் செய்துமுடித்தபோது அவர் மனம் நிறைந்துவிட்டது
அதன்பின் அங்கே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் தத்துவப்பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை. அவர் நிறைந்துகொண்டே இருக்கிறார்
சாரதா