ஜெ
ஓயாது தரித்ரநாராயணர்களுக்கு
அன்னம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது மைத்ராயனியம். அதில் இரண்டு நுட்பங்களை நான் கவனித்தேன்.
ஒன்று பசிக்கு அன்னம்வழியாகவே எல்லா சிந்தனைகளையும் அது ஒன்றாக்குகிறது. வேறு எதுவுமே
ஒன்றாக ஆக்குவதில்லை. சாந்திபனிமுனிவரின் அமைப்பு மையத்தைக்கண்டுபிடித்து இணைக்கமுயல்கிறது.
அது சமன்வயம். இது ஒன்றாக ஆக்குகிறது. மையமெல்லாம் தேடுவதில்லை. ஆகவே நான் இணைக்கிரேன்
என்ற நிலையும் இல்லை
அதேபோல அன்னம்
கொடுப்பவனே அன்னை என்னும் விஷயம். அந்த அன்னை என்னும் நிலை எப்படி யுவனாஸ்வன் என்னும்
ஆண் கனிந்து அன்னையானான் என்ற இடத்தில் தொடங்கி எப்படி அத்தனைபேரும் படிப்படியாக அன்னையானார்களென்பதிலே
வந்து முடிகிறது. அந்த பரிணாமமும் அழகானது
செல்வா