Monday, September 12, 2016

தேவாகுதி – கபிலன்






ஜெ

தேவாகுதி – கபிலன் கதை முன்பே வண்ணக்கடலில் வந்துவிட்டது.அதை நினைவுபடுத்திக்கொண்டதும் அங்கே சென்று அக்கதையை வாசித்தேன். இப்போதிருப்பதற்கு தலைகீழான விளக்கம். கபிலர் ஞானம் என்று தெளியாமலிருக்கிறார். அன்னையின் மடியில் சின்னக்குழந்தையாக ஆனபின்னரே மூலப்பிரகிருதி பற்றிய தெளிவை அடைகிறார். அது அங்கே இருக்கிறது. புகாரில் அந்தக்கதைச் சொல்லப்படுகிறது

இந்தக்கதையில் அன்னை நிறைவே அடையாதவளாக இருக்கிறாள். அவளுடைய நிரைவின்மை என்பது ஆதிஇயற்கையிலுள்ள நிறைவின்மையேதான். அதை மனிதர் நிறைக்கமுடியாது என்று கபிலர் சொல்லும்போது இந்தக்கதை தெளிவடைகிறது. அம்மா என்றால் பிரகிருதி என்றால் இக்கதையும் அர்த்தமாகிறது. இருகதைகளுமே சூட்சும்மமாக உள்ளன

மனோகர்