அன்புள்ள
ஜெ
சொல்வளர்காட்டை
வாசித்து முடித்தபின் வழக்கம்போல பின்னால்சென்று ஒவ்வொரு நாவலாகத் தொட்டு எடுத்துக்
கோர்த்தபடியே வந்தேன். நாவலின் உள்ளடக்கத்தை ஒன்றுடன் ஒன்று தொடுக்கும்போது எனக்கு
காண்டீபம்தான் முக்கியமானதாகத் தோன்றியது. அது வன்முறையின் உச்சத்தை அகிம்சையுடன் இணைக்கிறது.
உண்மையில் அதுதான் மகாபாரதத்தின் சாராம்சம். கடைசியில் அர்ஜுனன் அதைத்தான் சென்றுசேர்கிறான்.
ஆரம்பத்திலேயே அவன் செல்லும் திசை எது என வாசகர்களுக்குச் சொல்லிவிட்டீர்கள் என அதை
வாசித்தபோது தெரிந்துகொண்டேன்
ஜெயராமன்