அன்புள்ள
ஜெமோ
சொல்வளர்காடு
வாசித்து முடித்தபிறகுதான் இந்நாவலிலுள்ள பல விஷயங்களைத் தொட்டுத்தொட்டு எடுக்கமுடிந்தது.
இதிலுள்ள தத்துவ விவாதங்களெலாமே கதைகளாகத்தான் உள்ளன. கதைகளுக்குள் ஓடும் நுணுக்கமான
சரடுகளகவே தத்துவங்களை தொட்டு எடுக்கவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் அழகான ஒற்றை அஃபாரிசம்களாகவே
தத்துவம் வருகிறது. ஆக்ரோஷமான விவாதங்கள் இல்லை. அதுவே இதை அழகான நாவலாக ஆக்குகிறது
சொல்வளர்காட்டின்
தத்துவம் சொல்பொருள் முரண்பாட்டிலே ஆரம்பிக்கிறது. தத்துவத்துக்கும் நடைமுறைக்குமான
வேறுபாடுகள் பேசப்படுகின்றன. அந்த விவாதங்களை மட்டும் தனியாக எடுத்துக்கோர்த்தால்மட்டுமே
தருமன் கடைசியில் அடுமனைக்குச் சென்ரதை புரிந்துகொள்ளமுடியுமென நினைக்கிறேன்
அடுமனையில்
அறிந்த நடைமுறை மெய்ஞானத்தைக்கொண்டு தர்மன் ஆன்மிக மெய்ஞானத்தை நிராகரிக்கவில்லை. அதை
மேலும் நுட்பமாகப்புரிந்துகொள்கிறார். மீண்டும் மேலே சென்று அந்தப்பாதையிலேயே சென்று
கற்றறிந்த ஞானத்தை யோகசாதனையாக ஆக்கிக்கொள்கிறார்.
ஜெயராமன்