Tuesday, September 13, 2016

சாங்கியம்






பரிமாறக் கற்றுக்கொள்வதற்கு முன் தட்டுகளை கழுவக் கற்றுக்கொள்க! சமைக்கக் கற்றுக்கொள்வதற்கு முன் பரிமாறக் கற்றுக்கொள்க

என்ற வரியில் தொடங்கி சமையல் வழியாகவே தர்மர் சாங்கியத்தைக் கற்றுக்கொள்ளும் இடம் கவிதையாகவே இருந்தது. சாங்கியம் தொட்டுத் தொடங்குக என்பது மிகப்பெரிய ஆப்தவாக்கியம் போலத் தோன்றியது. முனிவரில் நான் கபிலன் என்ற கீதாவாக்யத்தில் வந்து முடிவதும் அற்புதமானது

கபிலஞானத்தை அடைந்தபின்னர்தான் கடந்துபோகமுடிகிறது. அதுதான் மண். எல்லாமே அங்கிருந்துதான் எழவேண்டும். கீதையின் அடித்தளமே சாங்கிய யோகம்தான்.  அதிலிருந்துதான் கீதை எழுகிறது

சாரங்கன்