Friday, September 9, 2016

ஏணியில்




அன்புநிறை ஜெ.மோ,



விடையளித்தமைக்கு நன்றி.

தேடலின் தளங்களுக்கு ஒளி கூட்டும் உங்கள் எழுத்துகள்.

எனது மூன்றாவது கேள்வியை நான் சரியாக எழுதவில்லையென எண்ணுகிறேன்.
வேதம், உபநிடதம், வேதாந்தம்,  என   அனைத்து கருத்துகளையும் பல கதாபாத்திரங்களின் கேள்விகளாய் மிகவும் ஆய்ந்து, ஒப்புக்கொள்ளும் விதமாக விளக்கியபின்(convincing explanation), இவை அனைத்தையும் உணர்ந்த பின் உறுதியாக இன்றைய நிலையில் இருந்து, சில படிகளேனும் ஆன்மிகமாக முன்னேறியிருப்போம் என உறுதியாக உணர்கிறேன். வாசகர்களாக, தேடுபவர்களாக இருப்பவர்களுக்கு இது வெறும் கதையல்ல. நாள்தோறும், பலமுறை வாசிக்க வாசிக்க உள்ளே பல்வேறு கதவுகள் திறந்துகொள்கின்றன. நிணமும் அறிவுமாய் இதை அறிந்து அதுவாகவே ஆகிச் செல்லும் நீங்கள் முற்றிலுமான அகவிடுதலையை உணரும் தருணம் வரும் என்றே எனக்குப்படுகிறது.  அனைத்தினின்றும் அகம்விடுதலையானபின் மீண்டும் இலக்கியம் இயலுமா? 

சுபஸ்ரீ

அன்புள்ள சுபஸ்ரீ,

ஒவ்வொன்றாய் தொட்டெணி எண்ணிடும் பொருள் ஒடுங்கையில் நின்றிடும் பரம்

நாராயணகுருவின் வரி. விஷ்ணுபுரத்தின் முகப்பௌ வரியும் இதுவே

எண்ணும்பொருள் ஒடுங்கவேண்டும். நான் என்றாவது புனைவை எழுதி நிறுத்திவிட்டேன் என்றால் மட்டுமே விடுதலை அடைந்துவிட்டேன் என்று பொருள்

ஏணியில் நின்றிருப்பவன் சென்றடைந்தவன் அல்ல
ஜெ