ஜெ,
வணக்கம்
யுவனாஸ்வனின்
கதை மிகவும் சுருக்கமாகவெ மகாபாரதத்தில் உள்ளது. வேள்விநீரை தவறுதலாகக்குடித்ததனால்
அவன் கருவுற்றான். அவன் விலாவைவெட்டி குழந்தையை எடுத்தார்கள். அவன் குழந்தை பசியால்
அழுதபோது இந்திரன் வந்து அவன் வாயில் கையை வைத்து என்னை குடிப்பான் என்றான். அதனால்
அக்குழந்தைக்கு மாந்ததா என்று பெயர் வந்தது.
பத்துப்பதினைந்து
வரிதான். அதிலிருந்து ஒரு நீண்டபயணம் செய்திருக்கிறீர்கள். யுவனாஸ்வன் பெண்மைகொள்வது,
கருவுறுவது அன்னை ஆவது முலையூட்டுவது என்று சொல்லி அவன் தலைமுறைகள் வழியாகக்கனிந்து
பேரன்னையாக ஆகி சமையலறையில் தெய்வமாகக்குடிகொள்வதுவரை ஒரு மிகப்பெரிய கதை. ஒரு கருவிலிருந்து
இந்த அளவுக்கு எப்படி பறந்து விரிகிறீர்கள் என்பதை நினைப்பதே பெரும் சவாலாக உள்ளது.
வெண்முரசின் அற்புதமே இந்த விரிவுதான்
சாமிநாதன்