Sunday, September 11, 2016

பசி






முரசின் ஓசைக்கு மத்தகம் இருக்கிறது என்னும் வரியை சம்பந்தமில்லாமல் வாசித்து வெளியே தள்ளப்பட்டேன். அது ஒரு தெறிப்பாக வந்துவிழுகிறதா, உண்மையிலேயே அதற்குப்பொருள் இருக்கிறதா என்று பார்த்தேன். 

சமையல்செய்பவர்கள் ஒருகட்டத்தில் வெறும் நுட்பமான மூக்குணர்வாகவே சமையலை அறிகிறார்கள். அதன்பின் அந்தப்பெரிய சமையலறையில் சமைக்கப்படும் எல்லா உணவையும் அவர்கள் உண்டுவிடுகிறார்கள். 

அவர்களின் வயிற்றுக்குக் கொஞ்சம் உனவு போதும். ஆனால் அவர்கள் நூறு மடங்கு ஆயிரம் மடங்கு உண்கிறார்கள். அப்படி நுண்ணுணர்வால் சொற்களைப்புரிந்துகொள்ள ஆரம்பித்தால் சொற்களும் கொஞ்சம் போதும். அதனால்தான் தருமன் அவன் செவிக்குள் கொட்டும் சொற்களில் ஓரிரு சொற்களை மட்டும் பெற்றுக்கொள்கிறான். அந்தச்சொற்களே மத்தகமாக ஆகி அவனை முட்டும் எனறு நினைத்தேன்

சண்முகம்