நன்று திருமூலநாதன் - வெண்முரசில் இந்த intertextuality நிறைய இருக்கும், உங்கள் குறளறிவை வைத்துக்கொண்டு மேலும் முக்குளித்து தரவேண்டுகிறோம்.
இந்த 'அடிதிருப்பப்பட்ட மான்தோல்' போன்ற வெண்களர் நிலம் சங்கப்பாடலில் உள்ளது.
அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவ னாட்டும் புல்வாய் போல
ஓடி யுய்தலுங் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே
( ஓரேருழவர், பொருண்மொழிக் காஞ்சி)
சங்கப்பாடலின் காட்சியுணர்வும் கவித்துவமும் களம் அமைத்துத் தர வெண்முரசு அதன் மேல் பல அடுக்குப்படிமங்களாக கட்டிக்கொண்டே செல்கிறது. நிலமும் நாரைகளும் யட்சர்களும் முயங்கும் படிமவெளி.
அனலுண்ட மான் இங்கு புதையவில்லை, 'ஒருவனே' இந்த நிலத்தில் தவிக்கிறான்...ஜல்லிக்கட்டு காளை போல அதன் கொம்பில் உள்ள வேதப்பொருள் நோக்கி வருகிறான். ஒக்கல் வாழ்க்கையை துறந்து மேலும் செல்கிறான்.
மதுசூதன் சம்பத்