ஜெ
இன்றைக்கு யாதவர்களின் குலப்போர் பற்றியச்
செய்திகளை வாசித்தேன். பாகவதம்போல கிருஷ்ணனைத் துதிக்கும் பக்திநூல்கள் கூட யாதவர்களின்
சண்டையை மறைக்கவில்லை . அது உண்மையிலேயே நடந்தது. அதை துர்வாசரின் சாபம் என்று சொல்லி
மழுப்பினார்கள். அந்தக்குலச்சண்டை இன்றுவரை இந்தியாவின் பெரிய சாபம். இங்கே கிருஷ்ணன்
பிறந்தான் என்பது வரம். நாம் குலச்சண்டையை விடவே மாட்டோம் என்பது சாபம். இதுதான் உண்மை.
நாணல்களால் அடித்துக்கொண்டு சாகும் அந்தக்கூட்டத்திடம் கிருஷ்னன் இரைஞ்சி நிற்பதைக்கண்டபோது
அவன் அழுவதைப்பார்த்தபோது இதுதான் யதார்த்தம் என்று புரிந்துகொண்டேன்.
மகாதேவன்