Wednesday, September 14, 2016

ஆப்தவாக்கியம்






ஜெ

வெண்முரசின் சொல்வளர்காட்டில் உபதேசங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் ஆப்தவாக்கியங்களை நீங்கள் எப்படிக் கதையாக ஆக்குகிறீர்கள் என்று பார்த்துக்கொண்டே வந்தேன். அகம்பிரம்மாஸ்மி, தத்வமஸி, பிரக்ஞானம் பிரம்மம் என்பதெல்லாம் கதையானதைக் கவனித்தேன்.

சூதர்மகன் மரத்திலேறும்போது அவன் காதில் தெய்வங்கள் சொன்னது ஓர் ஆப்தவாக்யம் என தெரிந்தது. அதுவே அவனை ஞானியாக்கி அந்தக்குருகுலத்தை அமைத்தது. ஆனால் அது என்ன என்று சொல்லப்படவில்லை.

ஆனால் அடுத்த அத்தியாயத்தின் கதை பல இடங்களில் திரும்பி அந்த ஆப்தவாக்கியத்தில் வந்து முடிகிறது. என்னை உண்ணுக. மாந்தாயஸ்யதி. அதை ஒரு உபநிஷத் வாக்கியம்போல ஆப்தவாக்யமாக ஆக்கியதை எண்ணியபோது உங்கள் தரிசனம் என்னவென்று புரிந்தது.

அதோடு கதைகள் வந்து இணையும் விதமும் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. யுவனாஸ்வன் கதை இங்கே எப்படி வந்துசேர்கிறது என்ற ஆர்வத்துடன் தான் வாசித்தேன்

பார்த்தசாரதி