நல்லதாக
ஒரு அவியல் செய்யத்தெரியாதவனுக்கு அத்வைதம் புரியப்போவதில்லை என்று நடராஜகுரு நித்ய
சைதன்ய யதியிடம் சொன்னதை எழுதியிருப்பீர்கள். அதை நான் குருவும் சிஷ்யனும் என்ற நூலில்
வாசித்தேன். ப சாந்தி மொழியாக்கம் செய்தது. அந்த தீவிரமான உண்மையை இந்த அடுமனையில்
மீண்டும் வாசிக்க நேர்ந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவியலென்பது ஒரு பெரிய balance.
அதுவழியகா ஒரு புதிய சுவை உருவாகி வருகிறது. அதைத்தெரிந்துகொண்டால் உலகம் உருவாகியதையேதெரிந்துகொண்டதுதான்.
அதைத்தான் தர்மர் கற்றுக்கொள்கிறார்
சண்முகம்