Wednesday, September 14, 2016

அனாத்மவாதமும் சர்வாத்மவாதமும்




சாங்கியதர்சனத்தில் சொல்லப்படும் முக்கியமான ஒரு கருத்து பொருளின் சூக்‌ஷ்மமான அஸ்தித்வம். அதை யோக வகுப்புகளில் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நாம் பார்க்கும் ஒருபொருள் இப்போது இருக்கும் வடிவில் வருவதற்கு முன்னால் இப்படி ஆவதற்கான ஸாத்யமாக உள்ளது.  இப்போதிருந்ததிலிருந்து எங்கே போகிறது என்றால் அந்த ஸாத்யத்தை நோக்கிச் செல்கிறது. 

அந்த நுண்ணியவிஷயத்தை பலவகையான உவமைகள் வழியாகச் சொல்லிக்கொண்டே செல்லும் அத்தியாயம் இன்றைக்கு வந்தது. அழகான உவமைகள்.  நெய்தீர்கையில் எங்கு செல்கிறது சுடர்? சுடராகும் முன் எங்கிருந்தது ஒளி? நெய்யென்றான பசுவில் உறையும் அனல் எது?”  

அதெபோல . கூத்தனில் உறையும் தெய்வம்ன்னும்கூட சாங்க்யத்திக்கு பொருத்தமானது. கூத்தனின் நடிப்புதான் தெய்வம். அவனுக்குள்தான் அது இருக்கிறது. ஆனால் அவன்தான் அது. அவனுக்கு அப்பார்ப்ட்டது இல்லை. அதைத்தான் அனாத்மவாதம் என்கிறார்க்ள் சாங்கியர்கள். அதைச் சொன்னதுமே அர்ஹர் வந்து சர்வாத்மவாதம் சொல்லிவிடுகிறார்

சுவாமி