Thursday, September 8, 2016

குரோதபக்தி



ப்ருகதரின் வெறுப்பை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவருக்கு கிருஷ்ணனின் mightiness கண்டிப்பாகத்தெரியும். அவர் ஒரு அறிஞர். இன்னொருவர் வெறும் மனிதர். வெறுப்பு அவருக்குள் இல்லை. அதை நடித்து தன்னை முக்கியமானவராக ஆக்குகிறார். இவருக்கு வெறுப்பு உள்ளூர இருக்கிறது. அந்த வெறுப்பின் ஆற்றல் காரணமாகத்தான் அவரால் நிற்கமுடிகிறது

அவரை கிருஷ்ணன் விளக்கும் முறை நுட்பமானது.  என்னை விரும்புகிறவர் என் வெண்முகத்தை அறிகிறார்கள். வெறுப்பவர் கரியமுகத்தை. சுக்லகிருஷ்ண சாகைகளுடன் என்னை அறிகிறார்கள் அந்த வரி வழியாக நான் அவரை நுட்பமாக அறிந்துகொண்டேன். அவர் கிருஷ்ணனை அந்த  இடத்தில் வெறுப்பதற்காக நியமிக்கப்பட்டிருப்பவர் அவ்வளவுதான்

சிசுபாலன் போன்றவர்களின் பக்திய க்ரோதபக்தி என்று சொல்லும் வழக்கம் வைணவர்களிடம் உண்டு. அவர்களும் பக்திதான் செலுத்தினார்கள். இடைவிடாமல் நினைத்துக்கொண்டிருந்தார்கள் அல்லவா?

சுவாமி