Tuesday, September 6, 2016

நிலைகுலைவு



வழக்கமாக கிருஷ்ணனின் பேச்சு சுருக்கமாகவும் கூர்மையாகவும்தான் இருக்கும். அங்கதமோ விளையாட்டோ காணப்படும். நீண்ட கதையாக அவன் நிகழ்ந்ததைச் சொல்வது மகாபாரத மூலத்தில் உள்ளதுதான். ஆனால் வெண்முரசில் ஒட்டவில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

ஆனால் இறுதியில் உண்மையில் அவன் எங்கே நிலைகுலைந்திருக்கிறான் என்பது தெரியவந்தபோது அந்த மொத்தப்பேச்சையும் திரும்பிப் பார்க்கத்தோன்றியது. அவனுடைய பிரச்சினை அனைத்தையும் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுதானா/. அப்படி எல்லாவற்றையும் அவனே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறானா/ என்ன தப்புசெய்தேன், என்ன செய்திருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறானா/

அவன் நிலைகுலைந்ததைப்புரிந்துகொள்ள முடிகிறது. பலராமன் பிரிவது என்பது அவனில் பாதில் பிரிந்துசெல்வதுபோலத்தான். அந்தப்பிரிவை நினைக்கவே பதற்றமாக இருந்தது

ஆர்.மோகன்