Friday, September 9, 2016

நைவேத்யம்






ஜெ

சொல்வளர்காட்டின் பரிணாமத்தைப்பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன். வேதக்கல்விநிலைகள் வழியாக ஒரு சமையலறைக்கு வந்துவிட்ட கதை எனக்குப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அதையும் வேதக்கல்விநிலையாகவே வெண்முரசு சொல்கிறது. அங்கேதான் வேதமெய்மையை தருமன் உணர்ந்துகொள்ளப்போகிறான் என்பதும் தெரிகிறது.

எந்தவகையில் பிருகதாரண்யகம் சாந்தீபனி உட்பட பிற குருகுலங்களிலிருந்து இது மேலானது என்று யோசித்தேன். வேட்கும் வேள்விநிலைகளுக்கு நடுவே வேதிக்கும் வேதநிலையென அது திகழ்ந்தது. என்ற ஒற்றைவரி புரியவைத்தது. பிற வேதநிலைகள் தெய்வங்களிடம் கல்வி ஞானம் செல்வம் என எதையாவது கேட்டுக்கொண்டே இருக்கின்றன. மைத்ராயனீயம் எதையும் கேட்கவில்லை. அது கொடுக்கமட்டும்தான் செய்கிறது. கொடுப்பதனால் அது விரிந்துகொண்டே இருக்கிறது. ஆகவே அது அறியும் ஞானமே வேறு

சாரங்கன்