ஜெ
ஒரேகதையின் இருபக்கங்களை இரு தத்துவவாதிகள் எழுப்பிக்கொள்வது
எனக்கு கொஞ்சம் கழித்துத்தான் உறைத்தது. நெருப்புக்கு பேதமில்லை என்றும் நெருப்பில்
எல்லாமே ஒன்றாகிவிடுகின்றன என்றும் ஒருதரப்பு சொன்னது. மலம் எரியும் கதை அதற்கு உதாரணம்.
ஆனால் இன்னொரு தரப்பு உடனே அதிலிருந்து மெலே போய் நெருப்பு உண்ட அவ்வடிவங்கள் நெருப்புக்குள் எங்கு உறைகின்றன?”
என்று கேட்கும்போது அந்த கதையே வேறுவடிவில் அமைகிறது. அதாவது அந்நெருப்புக்குள் மலம்
இருந்துகொண்டுதான் இருக்கிறது. உருமாறியிருக்கிறது. சாராம்சம் மாறவில்லை. இரு பார்வைகளும்
நேரடியாக முட்டிக்கொள்ளவில்லை. அந்த மோதல் தர்மரின் மனதுக்குள் நடக்கிறது என்பதே இந்த
அத்தியாயத்தின் நுட்பம்
ஜெயராமன்