ஜெ
யட்சப்பிரஸ்னம் வாசித்தேன். நீங்கள் அக்கேல்விபதில்களை பல இடங்களில் பொருத்தி வெவ்வேறு அர்த்தங்களை அளிக்கிறீர்கள். கவிதைபோல அர்த்தம் கொடுத்து வாசித்தால் பல வகையில் விரிவடைகிறது.
ஆனால் அந்தக்கேள்விபதில்களில் பல மிகச்சாதாரணமாக உள்ளன. அதுஅரசனின் மகாபாரத மொழியாக்கத்தில் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
சாமிநாதன்
அன்புள்ள சாமிநாதன்
அந்தக்கேள்விபதில்களை ஒரு பிற்கால உபநிஷதமாகக் கருதவேண்டும். அவற்றில் பின்னர் பலவகை இடைச்செருகல்கள் இருக்கலாம். உண்மையில் இவ்வினாவிடை வெவ்வேறு பிரதிகளில் வெவ்வேறு வகையிலேயே உள்ளது. கேரளத்தில் உள்ள மகாபாரத மறு ஆக்கங்களில் பல புதிய வினாவிடைகள் உள்ளன
ஜெ