Tuesday, September 13, 2016

சாங்கியத்தின் மூன்று வளைவு






பருப்பொருட்களில் வாழ்வது பொருண்மையில் குடிகொள்ளும் முதல்நிறைவின்மை

 மூன்றுகுணங்களின் நிகர்நிலை நாடல்.


இது தன்னை தானென உணர்வது அந்த நிறைவின்மையினால்தான்.  

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் தனித்தன்மைகொண்டிருப்பது அந்நிறைவின்மையை மையமென சூடியிருப்பதன் வழியாகவே


பொருளின் சாரமென்பது அந்நிறைவின்மை மட்டுமே


அதுவே புடவிச் செயல்பெருக்கென்றாகி நம்மைச்சூழ்ந்துள்ளது. நாமென்றும் ஆகியுள்ளது.



என்னும் வரிகள் வழியாக சாங்கிய தரிசனத்தை முழுமையாகவே சொல்லியிருக்கிறீர்கள் . நான் பலவாறாக யோகமையங்களில் இதைப்படித்துக்கொண்டே இருக்கிறேன். ப்ரச்சினை புரிந்துகொள்வது இல்லை. சரியான மொழிதான். நம் தத்துவ வகுப்புகளில் நவீன இலக்கிய அறிமுகம் இல்லாததனால் பழைமையான சத்தற்ற ஒரு மொழியை பயன்படுத்துகிறார்கள். ஆகவே சரியகாச் சொல்லமுடிவதில்லை. கிளீஷேக்கள்தான் வருகின்றன. 

அவற்றைக்கொண்டுசொல்லும்போது இதெல்லாம் அபத்தமாகக்கூடத் தோன்றுகிறது. இங்கே நீங்கள் நவீன மொழியில் கச்சிதமாகச் சொல்கிறீர்கள். தெளிவாகப் புரிகிறது


திரிவக்ரர் –மூன்று திரிபுகள் கொண்டவர் – என சாங்கியருக்கு பெயர் போட்டிருக்கும் நுட்பத்தைக்கூட கொஞ்சம் கழித்துத்தான் கவனித்தேன்


கிருஷ்ணமூர்த்தி