Friday, September 2, 2016

கண்ணனின் தோல்வி




அவர்களிடமிருந்து விலக நான் முயல்வதே இல்லை. அவர்களால் விலக்கப்படுகிறேன். அரசே, மீண்டும் மீண்டும் அவர்களை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறேன். ஒவ்வொருமுறையும் தோற்று தன்னந்தனியனாக திரும்ப வருகிறேன். யாதவகுடிகளில் எரியும் நெருப்பு என்னால் அணைக்கப்பட முடிவதாக இல்லை. நான் என் முழு உயிர்மூச்சாலும் ஊதி அணைத்து அப்பால் செல்வதற்குள் அவர்கள் அதை பற்றவைத்துக் கொண்டார்கள்.//

'யாதவகுடிகளில்' என்பதை 'இந்திய மக்களில்' என்று மாற்றிக்கொண்டால் இவ்வரிகள் பிரிவினையின்போது காந்தி சொல்வதுபோல் தெரிகிறது. உண்மையில் இந்த அத்தியாயம் முழுவதையும் பிரிவினைக்காலத்தில் நிகழ்ந்த பூசல், அதைச் சரிசெய்யப் பாடுபட்ட தலைவர்கள், என்று வாசிக்கமுடிகிறது. வரலாறு மீண்டும் மீண்டும் அப்படியே நிகழ்வதுதான் வழக்கமோ?

திருமூலநாதன்