ஜெமோ
மனம் கனிந்து
நிறையும் அடுமனைக்கு வந்து வேதத்தைக் கற்றுக்கொள்ளும் தருமனை வாசித்துக்கொண்டிருந்தபோது
எதற்காகவோ பின்னால்சென்று வாசித்தபோதுதான் அங்கே அடுமனையில் இருந்து ஒருவர் வந்து வெறுப்பைக்
கக்கிக்கொண்டு சென்றதை வாசித்தேன். அவரிடமிருந்துதான் இங்கே வந்திருக்கிறார்களென்று
புரிந்துகொண்டேன்.
அதன்பிறகே
கிருஷ்ணன் சொன்னதென்ன என்று புரிந்தது. அவர்கள் ஒரு வயுற்றுக்கு சமைக்கிறார்கள். ஆகவே
குறுகிப்போனார்கள். தாசிக்குத்தெரிந்த ஞானம் குலப்பெண்ணுக்குத்தெரிவதில்லை. அவள் மனம்
குறுகிவிடுகிறது.
அவர்கள் மைத்ராயனியம்
வந்துமெய்ஞானத்தை அடையவேண்டும் என்பது க்ருஷ்னனின் ஆணை. அதைத்தான் அவர்கள் அடைகிறார்கள்.
இரண்டுவகை சமையல்தான் கல்வி என்று புரிந்துகொள்ளமுடிந்தது
கிருஷ்ணமூர்த்தி