அன்புள்ள ஜெ
மாமலர் அற்புதமான தொடக்கம். ஒரு அத்தியாயம் எப்படி காய் முதிர்ந்து கனியாவதுமாதிரி விளங்கமுடியும் எனத்தெரிந்தது. சலிப்பைப்பற்றி தருமன் பேசுமிடம் அப்படியே சென்று சலிப்பே அறியாத பீமனைச் சென்றடைகிறது. விலங்குகளுக்கு சலிப்பே இல்லை. பீமனும் விலங்காக அங்கே இருக்கிறான். மனிதர்களை துரத்திவிடும் காடு அவனை அரவணைத்துக்கொள்கிறது.
தருமனின் சலிப்பை வாசித்தபோது இந்நாவலின் மனநிலை என்ன என்று ஊகிக்க முடியவில்லை. பீமன் குரங்குகளுடன் விளையாடும் காட்சி வந்ததுமே எல்லாமே தெளிவாகிவிட்டது. பீமனின் விளையாட்டுகளின் காட்சி இந்த நாவல் சரிதானே?
நாகராஜ்