Monday, July 14, 2014

குதிரையும் யானையும்

அன்புள்ள ஜெ

வெண்முரசு தீராத நுட்பங்களுடன் வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு வரியாக வாசிக்கவேண்டிய ஒரு நூலை நான் உண்மையில் இதுவரை வாசித்தது இல்லை. கொற்றவை அப்படிப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு அதன் நுட்பங்கள் நமக்கு பழகிப்போய் வேகமாக வாசிக்க முடிய்ம். மகாபாரதம் தொட்டுச்செல்லும் உணர்ச்சிகள் முடிவே இல்லாதவை. அதோடு அது சொல்லும் தகவல்களும் முடிவே இல்லாதவை. இப்போது வந்து கொண்டிருக்கும் அத்தியாயங்களில் யானை, குதிரை பற்றிய நுண்ணிய தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்ற்ன. இவை அனைத்துமே அற்புதமான குறியீடுகளாகவும் உள்ளன. குதிரை 'வயதுக்கு வருவது'அச்வத்தாமனும் அர்ச்சுனனும் இளைஞர்கள் ஆக மாறுவதன் சித்திரமேதான். ஆனால் இந்த தகவல்களில் எந்த அளவுக்கு சாஸ்திர உண்மை உள்ளது என்று கேட்கவிரும்புகிறேன்


அருண்


அன்புள்ள அருண்

குத்ரை யானை பற்றிய தகவல்கள் மூலநூல்களில் உள்ளவை. அவை இங்கே கவித்துவமாக கையாளப்பட்டுள்ளன. அந்த கவித்துவம் என்ன்டையது

ஜெ