அன்புள்ள ஜெ
இன்றைய பதிப்பை படித்த போது:
கற்றல், கற்பித்தல், கல்வி, பொருள், ஞானம் அனைத்தும் கிடைக்க அந்த இறை அருள் வேண்டும். அதை ஒருவர் சரஸ்வதியின் அருளால் எழுதினாலும் அதை எனக்கு படிக்க வாய்ப்பு உங்களால் ஏற்பட்டது.
கேள்விப் பட்டிருக்கிறேன். குருகுல படிப்பு பற்றி. இன்று உணர்ந்தேன். நன்றி.
என் மூளையால் பல விளங்கிக் கொள்ள முடியாததாக நினைக்கிறேன். ஆனால் எதையோ உணர்வது போல இருக்கிறது. என்ன என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ புரிவது போல இருக்கிறது. அது எனக்கு ஒரு விதமான ஆனந்ததை அளிக்கிறது. அவ்வளவு தான்.
அதனால் தான் புல்லாய் பிறவி தர வேண்டும் என்று பாடினார்களோ?
எதையோ எழுத நினைத்து எதையோ எழுதி விட்டேன். இருந்தாலும் என் மனது இன்றைய உங்கள் ஆக்கதினாலேயே சென்று கொண்டிருக்கும் என்று மட்டும் எனக்குத் தெரியும்.
அந்த இறை அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கட்டும்.
அன்புடன்
மாலா
அன்புள்ள மாலா
குரு என ஒருவரிடம் கூடவே இருந்து அவரது சிந்தனைகள் தோன்றும்போதே கற்க வாய்த்தவர்களுக்குப் புரியும் கல்வி என்பது எப்போதும் பேரானந்தம் கொண்டது என. சிறு சலிப்பு இருந்தால்கூட அது கல்வி அல்ல.
குதிரையுடன் கூடவே ஓடுவதற்கும் குதிரை ஓடுவதன் வீடியோவை பார்ப்பதற்கும் இடையேயான வேறுபாடு குருகுலக் கல்விக்கும் நூல்கல்விக்கும் நடுவே உள்ளது
ஜெ