ஓம் ஸ்ரீமுருகன் துணை
அன்புள்ள திரு.ஜெயமோகன் வணக்கம்.
அம்பையை ரஜோகுணமுடையவள் என்று வர்ணித்து உள்ளீர்கள். அவளுக்குள் உள்ள ஆவலும், அதனால் ஏற்படும் பிடிவாதமும். சால்வனா? அல்லது பீஷ்மனா என்ற தடுமாற்றம் ரஜோகுணத்திற்கு உரியதா? பல பிறவிகள் இனி எடுத்தும் அழிவுக்கு மட்மே காரணமாக நிற்கும் அந்த பிடிவாத குணம் ரஜோகுணத்திற்கு பொருந்துமா?
அம்பிகை தமோ குணத்திறகு உரியவள் என்றாள் அவள் எப்படி சத்தவ குணத்துடன், அம்பாலிகையுடன் கைக்கோர்க்கப்பட முடியும். அம்பிகை ஞானத்தைக்கண்டு கண்மூடி குருட்டுப்பிள்ளையை பெறுவதாலேயே அவளை தமோக்குணத்திற்கு உரியவள் என்று நீங்கள் சொல்கின்றீர்களா? அவள் ரஜோகுணம் உடையவள் என்பதால்தான் அரசியானாள். தமோகுணம் உடையவள் என்றால் அரசியாகும் தகுதியை தானே இழந்து இருப்பால் அம்மையோல. அவளால் ஒருபோதும் அம்பாலிகையுடன் கைக்கோர்த்து இருக்க முடியாது.
அம்பா பின்னால் அடையபோகும் அனைத்து இழிந்த வாழ்க்கைக்கும் அவளின் தமோ குணம்தானே காரணம். பிடிவாதம் கொண்ட வெற்று ஆசைதானே தமோ குணத்தின் குறிக்கோள். தானும் நல்லதை தேடாமல், மற்றவர் வழங்கும் நல்லதையும் ஏற்காமல் அவலத்தில் உழன்று அழித்தல்தானே தமோ குணம்.
நன்றி. நிற்க..
எந்த விதத்திலும் இந்த கடிதம் உங்கள் இடத்தில் சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைவுகள் உடைனேயே எழுதுகிறேன். எனது மனபிம்பத்தை மாற்றிக்கொள்ளவதற்குத்தான் இந்த கடிதம். குற்றம் சொல்ல அல்ல. உங்களின் ஆழ்த ஞானம் வாசகனுக்கு பல சாவிகளை வழங்கி பொக்கிஷங்களை திறந்துக்காட்டுகிறது. இதற்கும் நல்ல விளக்கம் கிடைத்தால் நலம் பெறுவோம்.
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புள்ள
ஆர்.மாணிக்கவேல்