Tuesday, July 15, 2014

நிகர் வாழ்க்கை

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் ஓநாய்குலச்சின்னம் வாசித்தேன். அதனை வாசிக்கும்பொழுதும், வெண்முரசு வாசிக்கும்பொழுதும் அதிலுள்ள கதாபாத்திரங்கள் நான் என் நிஜ வாழ்வில் சந்திப்பது போன்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. உதாரணமாக ஓநாய்குலச்சின்னத்தில் கஸ்மாய் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு என் மன அள‌வில் நான் வடிவம் கொடுத்திருந்தேன். ஆனால் பின்னொரு நாள் எனது அலுவலக கேண்டீனில் வேலை செய்யும் ஒரு சீனப் பெண்மணி எனக்கு கஸ்மாயை நியாயப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். அதனைப் போலவே மகாபாரத தர்மனின் கதாபாத்திரம். இதை நான் சமீப காலத்திய வாசிப்புகளின் போதே உணர்கிறேன். 

இதற்கு முன்னரெல்லாம் வாசிக்கும் பொழுது அந்த காட்சி மனதளவில் விரிவதோடு சரி. இப்போதெல்லாம் ஒவ்வொருவரையும் எங்காவது பார்க்கிறேன். இது வாசிப்பின் ஒரு நிலையா இல்லை எனது மனப்பிறழ்வா?

http://www.rajeshkumaronline.in/wolf-totem/
அன்புள்ள ராஜேஷ்


இலக்கியப்படைப்புகள் நுண் சித்தரிப்புகளால் ஆனவை. அவை எந்த அளவுக்கு இலக்கியத்தகுதி உடையனவோ அந்த அளவுக்கு உண்மையான வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கையை வாசகனுக்கு அளிக்கும்.  அதுவே அவற்றை அளக்கும் அளவுகோலும் ஆகும்.
ஜெ