Saturday, July 12, 2014

ஐயங்கள்,பயிற்சிகள்

அன்புள்ள ஜயமோகன்,
தங்கள் வெண்முரசு மின் தொடரை கடந்த இரண்டு மாதமாகத் தான் வாசித்து வருகின்றேன் - அபாரம்.
பாரதக்கதை முழுதும் தெரியும், என்ற அடியேனது ஆணவக்குமிழி, முதல் இரண்டு அத்யாயத்திலேயே உடைந்தது.
கதாபத்திரங்களின் குணங்களைக் சுற்றி சம்பவங்களைப் பின்னும் தங்கள் பாணி முற்றிலும் புதியது.
சிறியேனுக்குத் தெரிந்த குறை/பிழை தமிழில், என்னுள் தங்கள் எழத்து ஏற்படுத்தும் பாதிப்பை, அவ்வப்பொழுது அஞ்சல் செய்கின்றேன்.
வாழ்க தங்கள் தமிழ் பணி.

இப்படிக்கு கோகுல்



அன்புள்ள கோகுல்,

நன்றி

ஒரு நல்ல படைப்பு அதை புரிந்துகொள்வதற்கான கருவிகளையும் அதுவே அளிக்கவேண்டும். வெண்முரசை சற்று தொடர்ந்தாலே எல்லாவற்றையும் கற்கலாம்

ஜெ


ஜெயமோகன் அவர்களுக்கு,

நேற்று உங்கள் வலைதளம் மூலமே 'வெண்முரசு விவாதங்கள்' வலைதளத்தை அடைந்தேன்.

நீங்கள் இந்த தளத்தில் பின்னூட்டம் இட அனுமதித்துள்ளது கன்டு ஒரு பின்னூட்டமும் இட்டேன். முன்னம் உங்களுக்கு தெரிவித்தபடி என் போன்றவர்களுக்கு இத்தளம் மிக உதவியாக இருக்கும்.

உங்களுடய Google+-ல் கூட நீங்கள் விவாதங்கள் தளத்தில் இடும் பதிவுகள் வருகின்ரன.

நீங்களே இத்தளத்தையும் நிர்வகித்து, பதிலும் கொடுத்து வருவது அதிக வேலை பளு. உங்கள் உழப்பு உர்ச்சாகமும் அளிக்கிரது, பிரம்மிக்கவும் வைக்கிறது!

நன்றி
வெ. ராகவ்

அன்புள்ள ராகவ்

இது சில சிறிய ஐயங்கள் பலருக்கும் நீடிப்பதைக் கண்டபின் உருவாக்கப்பட்டது. வேறு ஒருவர் அதே ஐயத்தைக் கேட்டிருப்பார். அது அனைவருக்கும் உதவும் அல்லவா”?

ஜெ