வணக்கம் திரு. ஜெ..
”பன்னிருநாட்களாக அஸ்தினபுரியின் வடபகுதியில் இருந்த புராணகங்கை காட்டில் வேட்டையாடியபின்இரவில் அரண்மனையை ஒட்டிய மரக்கிளையில் சேக்கேறியது சுகோணன்”
இந்த வாக்கியத்தில் வரும் “சேக்கேறியது” என்ற சொல் சுட்டும் பொருள் என்ன? இப்படிக்கேட்பது சரியா? தவறா? என்று அறியாமலே கேட்கிறேன்.
நன்றி
வாழ்க வளமுடன்
ராமராஜன் மாணிக்கவேல்
சேக்கேறிதல் என்றால் பறவைகள் கூடணைதல். சேக்கை படுக்கை
ஜெ .