Thursday, July 24, 2014

சில வினாக்கள்

மாணிக்கவேல் மற்றும் துரைவேல் ஆகிய இரு வேல்களின் வாசிப்பும் இடுகைகளும் உதவியாக இருக்கின்றன.

1. அனைத்துக்கும் உள்ள மூல காரணத்தை இன்னும் முன்னர், இன்னும் முன்னர் என மேலும் பின்னோக்கி கொண்டு செல்லுதல் வேண்முரசின் ஒரு பொதுத்  தன்மையாகவே  கருதுகிறேன் , இது காவியத்தை விதியின் பக்கம் மேலும் சாய்க்கிறது.   

2. நமது  அன்றாட வாழ்வில் அரிதாகவே தோன்றும் பார்வைகள் சந்தித்துக் கொள்வது, உடல்மொழி  போன்ற  நுண் அனுபவங்களுக்கு நமது வாழ்வில் குறைந்த கவனமே உண்டு அவைகளின் தாக்கமும் குறைவு , வெண்முரசில் இது மரணம்,விபத்து ,அவமானம் போன்ற வலிய அனுபவங்களுக்கு  இணையாக தாகத்தை ஏற்படுத்துகிறது. 

3. அதேபோல  காமம் ,தாய்மை  போன்ற மனித  அடிப்படை விசை என்று கூற முடியாத கொடை ,நட்பு  போன்ற உணர்வுகள் இக்காவியத்தில் எழுசியூட்டுகிறது, அடிப்படை உணர்வுகளுக்கு இணையான ஒரு உணர்வைத் தருவதும் வெண்முரசின்  பொது அம்சம் என எண்ணுகிறேன்.  நண்பர்களுக்கும் அவ்வாறு தோன்றுகிறதா என அறிய விரும்புகிறேன்.  

மூல காரணம் இன்னும் மெல்லியது ,இன்னமும் முன்பே துவங்கியது -நுண் அனுபவங்கள் வலிய  அனுபவங்களுக்கு இணையானது -அன்றாட உணர்வுகள் அடிப்படை உணர்வுகளுக்கு இணையாகக் கூடும் என வெண்முரசை அதன் குணத்தின் அடிப்படையில் தொகுத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். ஒப்புக் கொள்வீர்களா 

கிருஷ்ணன்