Wednesday, July 9, 2014

தாலிப்பனை

 அன்புள்ள திரு.ஜெ.. வணக்கம். அடிக்கடி சந்தேகம் கேட்டு சங்கடப்படுத்துவதற்கு வருந்துகிறேன். கேட்காமலும் இருக்க முடியவில்லை. அது உங்கள் எழுத்து செய்யும் வேலை. நிற்க.

தாலிப்பீலி என்பதும். தாலிப்பனையோலை என்பதும் ஒன்றா? அல்லது வேறுவேறா?  தாலிப்பீலி என்பது மூன்றுகிளைக்கொண்ட பூவைக்குறிக்கின்றதா? பல இடங்களில்  மலர் என்றே சொல்லி வந்து உள்ளீர்கள்.

தாலிப்பீலிகளை பந்தல்நடுவே இருந்த வட்டவடிவமான மண் மேடையில்வரையப்பட்ட மாக்கோலம் நடுவே இருந்த மண்கலத்தில் கொண்டுசென்று வைத்தனர்.(இது கிராம மக்கள் வரிசை எடுத்துவந்த நிகழ்ச்சியைக்குறிக்கிறதுஇது ஒரு நிகழ்வுமுடிந்துவிடுகிறது.
அதன்பிறகு வரும் வரியில்

அதன் முன்னால் வரையப்பட்டிருந்த பன்னிரு களங்கள் கொண்ட சக்கரத்தின் நடுவேஇருந்த சிறியபீடத்தில் தாலி்ப்பனையோலை வைக்கப்பட்டது(மணயோலை எழுதும்சடங்குக்காக பனையோலை மாற்றி வைக்கப்பட்ட நிகழ்வை இது குறிக்கிறதா?)
அங்கு மறைந்து உள்ளது காலநேர இடைவெளியாஅல்லது அங்கு ஒரு செயல்நடப்பது மறைந்து உள்ளதாமுன்னாடி வைத்த கிராம மக்கள் சென்றபின்பு, அடுத்து பூசையை செய்பவர்கள் (மணஓலை எழுதுபவர்கள்)தாலிப்னையோலையை மட்டும் எடுத்து இந்த பீடத்தில் வைத்தார்களா?
இதனால்தான் தாலிப்பீலி என்பதும் தாலிப்பனையோலை என்பதும் வேறுவேறுப்போலஎண்ணச்செய்து எண்ணத்தை தடைசெய்கின்றது.
12 களங்கள் கொண்ட சக்கரம்(ராசிசக்கரத்தை நினைவு செய்தது)

முன்னால் மண்கலத்தில் வைக்கப்பட்ட தாலிப்பீலி. பின் 12 களம் கொண்ட சக்கர மையப்பீடத்திற்கு மாற்றப்பட்டதா? இப்பதான் கேள்விக்கே வந்தேன்.

நன்றி
வாழ்க வளமுடன்.

 ராமராஜன் மாணிக்கவேல்
தாலிப்பனையின் மலர் நீண்ட இலைபோல இருக்கும். [அந்த படத்திலேயே காணலாம்] அதைத்தான் பீலி என்றும் சொல்கிறார்கள். மரத்தில் அது உச்சியில் மயிற்பீலி போலவே தெரியும்

ஜெ