Wednesday, July 9, 2014

சிகண்டியின் வயது

அன்புள்ள ஜெயமோகன்..
                          நான் தங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருபவன்..தங்களுடைய வெண்முரசு தங்களுடைய எழுத்தின் சிகரம் என்றே நினைக்கிறேன்... அதிலும் முதற்கனல் அபாரம் .. புனைவின் உச்சம் என்றே கூறலாம்..குறிப்பாக அம்பை .. பீஷ்மர் பகுதிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை...இது வரை 3 முறை படித்து விட்டேன்.. மழைப்பாடல் கதை ஓட்டம் செறிந்ததாக இருக்கிறது...முதற்கனலில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டும் உள்ளது... எப்படி பார்த்தாலும் சிகண்டி .. திருதரஸ்திரன் மற்றும் பாண்டு வின் சம வயதிநராக வோ அல்லது ஓரிரு வயது வித்தியாசத்தூடானோ தான் இருக்க முடியும் ... ஆனால் முதற்கனலில் அவர்களின் பிறப்புக்கு முன்பாகவே சிகண்டி இன் வாலிப பருவம் வரை வந்து விட்டதே எப்படி...??? 
                                                                                                                          நலமாக இருக்க வாழ்த்துகள்
                                                                                                                                                                                                                                                                                                                                                          அன்புடன்
                                                                                                                                                        அமர்நாத்      

அன்புள்ள அமர்நாத் மகாபாரதக் கதையோட்டத்தில் ஏராளமான இடைச்செருகல்கள் காரணமாக கதைமாந்தர்களின் வயதுகளை மதிப்பிடவே முடியாது. நூறு இருநூறு வருடங்கள்கூட் வரும். சகுனி திருதராஷ்டிரனைவிட சற்று மூத்தவன் என்று கொள்வதே ஓரளவு சரியாக இருக்கிறது. இது நானே முடிவுசெய்வதுதான் ஜெ