ஜெ,
கர்ணனை வியாசனின் மானசபுத்திரன் என்று சொல்லியிருந்தீர்கள். வியாசர் கர்ணனை சிறப்பாக காட்டவில்லை , அவனை கெட்டவன் என்றுதான் சொல்கிறான் என்றும் கர்ணனை சிவாஜி நடித்த சினிமாவிலேதான் ஹீரோ அளவுக்கு தூக்கி விட்டார்கள் என்றும் ஒருவர் சொன்னார். என்னுடைய சந்தேகத்துக்காக் இதை கேட்கிறேன். இது எந்த அளவுக்குச் சரி?
சிவராமன்
சிவராமன்
அதேகாலத்தில்
மனிதர்கள்வழிவிட்டு விலக்
பகைவர் நகரங்களை வெல்பவன்ம்
உடன் பிறந்த கவசம் அணிந்தவன்
குண்டலங்கள் ஒளிரும் முகம் கொண்டவன்
குந்திக்கு இளமையில் பிறந்தவன்
சுடரும் கிரணங்களின் மைந்தன்
அகன்றவிழிகள் கொண்டவன்
பகைவர் படையை அழிப்பவன்
உவகையுடன் படைக்கலம் ஏந்தி
மாமலை காலால் நடப்பதுபோல
அரங்கி நுழைந்தான்!
ஆற்றலில் யானையும்
அஞ்சாமையில் காளையும்
வெற்றியில் சிம்மமும்
ஆனவன்.
ஒளியில் சூரியன்
அருளில் சந்திரன்
வெம்மையில் நெருப்பு
கொடியேந்திய பனைமரமென உயர்ந்தவன்
சிம்மத்தின் வயிறுடையவன்
இளையவன்
எண்ணிமுடியா நற்குணங்கள்கொண்டவன்
அழகில் ஈடற்றவன்
வல்லமை மிக்க தோள்கள் கொண்டவன்
சூரியனின் மைந்தன்
அவைபுகுந்தான்
இது கர்ணனைப்பற்றிய வியாசனின் வர்ணனை. பெரும்பாலும் கர்ணன் இப்படி தாத்தனின் கையால் தலைவருடப்பட்டே காவியத்தில் முன்வைக்கப்படுகிறான்
கதையை வைத்து நோக்கினாலே தாத்தனுக்கும் பேரனுக்குமான ஒற்றுமை தெரியும், தனிக்கரிசனமும் புரியும்.
ஜெ