Thursday, July 17, 2014

துரோணர்

அன்புள்ள ஜெமோ

வெண்முரசில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் குருகுலவாசம் பற்றிய சித்தரிப்பு மெய்மறக்கச்செய்கிறது. ஒரு குருவுடன் கூடவே இருந்து அவரது சிந்தனை ஒழுக்கை காணநேர்வது பெரிய பாக்கியம் என்று எண்ணிக்கொண்டேன். ஏற்கனவே பல குருநாதர்கள் இதிலே வந்திருக்கிறார்கள். அக்னிவேசர் பெரிய குருநாதர். அதேபோல கிருபரும் பெரிய குருநாதர். ஆனால் இன்றைக்கும் பாரதவர்ஷத்தின் ஞாபகத்திலே வாழக்கூடிய முதல் குருநதர் என்றால் அது துரோணாச்சார்யார் தான் அவரை நீங்கள் எப்படிக் காட்டப்போகிறீர்கள் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். முன்னதாக அவர்களை காட்டிவிட்டதனால் அதேவரிசையிலே ஒருவராக துரோணரும் அமைந்துவிடுவாரோ என்ற பயம் இருந்தது. ஆனால் அற்புதமாக வேறுபாட்டைக் காட்டிவிட்டீர்கள். வேறுபாட்டை எப்படி சொல்ல என்றே தெரியவில்லை. மற்றவர்கள் எல்லாம் கற்பிக்கிறார்கள். துரோணர் கற்பிக்கக்கூடிய பாடமாகவே மாறி விடுகிறார். ஒருவகையான trans நிலையில் சென்றுகொள்கிறார். அவர் பேசிக்கொண்டே போகும் விதம் அற்புதம். அதேசமயம் அவர் அப்படிக் கற்பிக்கிற நேரத்தில் மட்டும்தான் பெரிய ஆசிரியர் மற்றவேளைகளில் சாதாரணமான மனிதர் என்பதையும் காட்டுகிறீர்கள். எனக்கு இந்த metamorphosis தான் முக்கியமானதாகத் தோன்றுகிறது. துரோணர் கற்பிக்கக்கூடிய விஷயங்களை எழுதும்போதும் அந்த பேராசானின் தகுதியை சிறப்பாகச் சொல்கிறீர்கள். வேறுவேறு நூல்களில் இருந்து எடுத்து அதையெல்லாம் துரோணர் கற்பித்தார் என்று சொல்லியிருந்தால் இப்போதுள்ள height  வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். துரோணர் சாஸ்திரங்களில் இருந்து சொல்வது கொஞ்சம். நேரடியாக அவரது observations தான்பெரும்பாலும். அதாவது அவற்றை அவர் மட்டும்தான் சொல்லிக்கொடுக்க முடியும். அவருடைய சொந்த ஞானம் அதெல்லாம்.

அவர் ஒரு பெரிய ஞானிமாதிரியும் கவிஞர் மாதிரியும் தெரிகிறார். வில்வித்தையை அப்படியே கவிதையாக ஆக்கிவிடுகிறார். அதையே மெய்ஞானமாகவும் மாற்றுகிறார். இந்த அத்தியாயங்களில் உள்ள இந்த transcendental wisdom உங்களுடைய சிருஷ்டி. அதைத்தான் பலமுறை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். அது கொடுக்கக்கூடிய bliss அற்புதமானது. ஆனால் திரும்பத்திரும்ப பலரிடம் கேட்டால் ஒருத்தரும் இந்த அம்சத்தை கவனித்ததில்லை என்று தெரிகிறது. அவர்கள் எல்லாரும் இதை வில்வித்தை பற்றியது என்கிறார்கள். உதாரணமாக முதலில் குதிரை. அதன் பிறகு யானை. அதன்பிறகு பறவை. adolescence, adulthood, maturity என்று மூன்று நிலைகள். குதிரை ஒரு கட்டம். யானை அகங்காரம். பறவை liberation இந்தமூன்றுமே பாம்பின் அம்சங்கள் என்னும் போது எங்கேயோ செல்கிறது. பாம்பு ஆதிசிருஷ்டி. அதேபோல பாம்பை மூன்றிலுமே அடையாளம் கானக்கூடிய கவித்துவம். நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. இதை இன்னும்கூட விரிவாக எழுதியிருந்தால் அதிகம்பேர் வாசிப்பார்கள் ரசிப்பார்கள்


ஆர். சங்கரநாராயணன்