Wednesday, July 9, 2014

குணங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமாக இருக்கிறீர்களா?

கர்ப்ப வகைகளை பற்றி (வெண்முரசு மழைப்பாடல் - 33) நீங்கள் சொல்லும் பொழுது அந்தக் கருத்தாக்கம் பற்றிய விளக்கம் வேண்டுகிறேன்.

ஸத்வம், ரஜஸ், தமஸ் - இதை எப்படி கறுப்பு வெள்ளையாக வரையறுக்க இயலும்? இது ஒரு ஸ்பெக்ட்ரம் ஆகவே எனக்கு புலப்படுகிறது. அதாவது நம்மிடம் மூன்றும் இருக்கும். எதை நான் வெளிப்படுத்தவேண்டுமோ இடம் பொருள் அறிந்து வெளிப்படுத்துகிறேன். ஒருவரை ஒரு குறிப்பிட்ட குணம் கொண்டவர் என்று அடைப்பது சரிதானா? 

பின்னாட்களில் கர்ணனிடமே மூன்றும் வெளிப்படுவதை நாம் பார்க்கிறோமே?

நன்றி.

பக்ஸ்

மகாபாரதம் மட்டுமல்ல அனைத்து நூல்களும் அப்படித்தான் சொல்கின்றன. ஆனால் கதைமாந்தரை குண அடிபப்டையில் பிரிப்பது இந்திய அழகியலின் உத்தி. ஓங்கி நின்று வழிகாட்டும் குணத்தின் அடிப்படையில். அதற்கான நிறப்பாகுபாடுகளும் உண்டு

ஜெ