Wednesday, July 9, 2014

கர்ணனைக் கொல்லும் குந்தி

நான் சிறுவதிலேயே கேள்விபட்டிருக்கிறேன்.  தாய் குட்டிகளில் ஒன்றை தின்றுவிடும். அதே சமயம் மற்ற குட்டிகளை தன் ஆற்றல் முழுதும் செலவிட்டு தன் உயிருக்கு நிகராக காக்கும். மனிதர்கள் தங்களை ஞானத்தால் நிறைத்துக்கொள்ளலாம். ஆனால் அவரகளின் சொற்களாலும் பாவனகளினாலும் கொண்ட கனத்த ஆடையை விலக்கி பார்த்தால் அவர்களுக்குள் குடிகொண்டிருக்கும் ஆதி மிருகத்தை அறியக்கூடும். குந்திக்குள் இருந்த அன்னை மிருகம் கொன்று உண்ட குட்டியே கர்ணன் என இப்பகுதி உணர்த்தி செல்கிறது. அது மற்ற ஆதரவற்றிருக்கும் ஐந்து குட்டிகளை காப்பதற்கு ஒரு குட்டியை பலி கொள்கிறது, அதாவது கைவிடுகிறது. குந்தியின் ஆழ்மனம் செல்லும் வழியினை இந்த ஒரு கனவுக்காட்சி விளக்கி செல்கிறது. அற்புதம்.  வெண்முரசு ஓவியங்கள் அருமையாக இருக்கின்றன என்பது தேய்வழக்காகிவிட்டது எனலாம். ஆனால் ஒரு கனவுக்காட்சியை ஓவியத்தில் கொண்டுவருவது ஒருவகையில் எளிது. ஏனென்றால் கனவில் ஒரு கணம் மட்டுமே ஓவியத்தில் வடிக்கப்படுகிறது.  ஆனால் முழுக்கனவையும் எழுத்தில் கொணர்வது மற்றும் அக்கனவைஒரு முப்பரிமான திரைக்காட்சியாக வாசகனை காணவைப்பது உங்கள் எழுத்தின் வல்லமையாகும்.

அன்புடன் 
த.துரைவேல்