ஜெ
இன்றைய அத்தியாயத்தின்
சிறப்பே கிருஷ்னன் என்னும் மித் எப்படி உருவாகி நீடிக்கிறது என்பதைப்பற்றிய நுணுக்கமான
குறிப்புகள்தான். ஒரு பெரிய ஆளுமையை நேரிலே பார்த்ததும் அவர் எப்படிச் சின்ன உருவமாக
தோற்றமளிக்கிறார் என்பதை நான் கமல்ஹாசனை நேரில் பார்த்ததும் புரிந்துகொண்டேன். நம்
விழாவிலேதான். அவனை நாம் கூர்ந்துபார்க்கிறோம். நாம் பார்ப்பதனால் அவன் வளர்கிறான்.
நம் உள்ளே உருவாகி வந்து நாம் காண நின்றிருக்கிறான்.
அத்துடன்
அவனுடைய இயல்பிலேயே உள்ள கூர்மை. டிரமாட்டிக் ஆக முன்வந்து நிற்கும்தன்மை ஆகியவையும்
முக்கியமானவை. கிருஷ்ணன் என்ற மித்தை உருவாக்கி நிலைநிறுத்தி உடனே அதை உடைக்கவும் ஆரம்பிக்கிறீர்கள்.
உடனே இதைக்கடந்துபோய் அவனை மீண்டும் பெரிதாக உருவாக்கவும் ஆரம்பிப்பீர்கள் என நினைக்கிறேன்
ராம்குமார்