Sunday, August 11, 2019

யோகமெனும் காடு




ஜெ

வஜ்ர யோகினியைப்பற்றி இளைய யாதவர் சொல்லும் இடம் வரும் அத்தியாயத்தை வாசித்தேன். இணையத்திற்குச் சென்று வஜ்ரயோகினியைப் பற்றி வாசித்து படங்களையும் பார்த்தேன். அதன்பின் அந்த அத்தியாயத்தை வாசித்துக்கொண்டிருக்கையில்தான் குருக்ஷேத்திரத்தைச் சூழ்ந்திருந்த காடு பற்றிய அந்த வர்ணனையைப் பார்த்தேன். அது ஆயிரம் கைகளில் பிணங்களை வைத்துக்கொண்டிருக்கும் வஜ்ரயோகினியேதான் என்று தோன்றியது. எல்லா வர்ணனைகளும் மிகச்சரியாகப்பொருந்துகின்றன. நான் வேகமாக வாசித்துச்சென்றால் வெறும் சூழல்வர்ணனைகளாகத் தோன்றும். கூர்ந்து வாசிக்கையில் இப்படி அது வளர்ந்துகொண்டே செல்கிறது

செல்வக்குமார்